உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியாயி, 55; கூலித்தொழிலாளி. இவரது மகன் கணேசன், 33; ரிக் வண்டி டிரைவர். இவர், கடந்த ஏப்., 18 காலை, 8:00 மணிக்கு, கணேசன் என்பவரது ரிக் வண்டியில் வெளிமாநிலத்துக்கு சென்றார். தற்போது, நான்கு மாதங்கள் ஆகியும் கணேசன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவருடன் வேலைக்கு சென்றவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு, அவரது தாய் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ