மேலும் செய்திகள்
நுாறு நாள் திட்டத்தில் முறைகேடுகளை களைய உறுதி
12-Jul-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்.,ல், சமூக தணிக்கை இறுதி செய்தல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. மூத்த குடிமகன் ஆப்ரகாம் தலைமை வகித்தார். தோகைமலை யூனியன் குழு முன்னாள் தலைவர் சுகந்தி சசிகுமார், கூடலுார் பஞ்.. முன்னாள் தலைவர் அடைக்கலம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பஞ்.,செயலாளர் வெங்கடேஸ்வரன் தீர்மானங்களை வாசித்தார். இதில், ஊராட்சி ஒன்றிய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் வீடு வீடாக சென்று பயனாளிகளை நேரில் சந்தித்து, வேலை அடையாள அட்டைகளை ஆவணங்களுடன் ஒப்பீடு செய்து சரி பார்க்கப்பட்டது.இதில் பொதுமக்கள் பேசுகையில்,' கூடலுார் ஊராட்சி மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் குளங்கள், ஆற்றுவாரிகளை துார் வாருதல், ஏரி துார் வரும் பணிகளை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரிகள் பரிந்துறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பேசினர். சமூகஆர்வலர் பொன்னம்பலம் ஆசிரியர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராகுல், சமூக தணிக்கை ஒருங்கிணைப்பாளர் இந்துமதி உள்பட பணித்தள பொறுப்பாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
12-Jul-2025