மேலும் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
14-Sep-2025
கரூர், கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், சின்னகாளிபாளையத்தில் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.அதில், ஆடுகள், மாடுகள், வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது. சிறந்த கன்று வளர்ப்பாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் சாந்தி, மாவட்ட துணை இயக்குனர் ரகமத்துல்லா, கோட்ட உதவி இயக்குனர் உமாசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
14-Sep-2025