கிருஷ்ணராயபுரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு கூட்டம்
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2025 தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் பயிற்சி வகுப்பு மற்றும் பி.எல்.ஏ.,2 கூட்டம் நடந்தது.உதவி ஓட்டுப்பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமானர் சிவக்குமார் தலைமை வகித்தார். அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பி.எல்.ஏ., 2 ஆகியோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்- 2025 தொடர்பாக அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு, வீடு வீடாக சென்று படிவம் வழங்குதல், மொபைல்போனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் விஜயா, கடவூர் தாசில்தார் ராஜாமணி, கிருஷ்ணராயபுரம் தனி தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்ட வித்தியாவதி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சித்ரா, கடவூர் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பெரியசாமி மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.