உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தபால் வார விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரை வெளியீடு

தபால் வார விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரை வெளியீடு

கரூர், கரூர் தலைமை தபால் நிலையத்தில், தபால் வார விழாவை முன்னிட்டு தபால் தலை சேகரிப்பு தினம் கொண்டாடப்பட்டது.மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை வகித்தார். இந்திய தபால் துறை சார்பில் தபால் வார விழாவானது வரும், 10 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கரூர் வீட்டு அலங்கார ஜவுளிகள் சிறப்பு அஞ்சல் உரை வெளியிடப்பட்டது. கரூர் வீட்டு அலங்கார ஜவுளிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.நிகழ்ச்சியில், மத்திய மண்டல அஞ்சல் துணை இயக்குனர் கணேஷ், கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை