உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

கரூர் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் அக்.,15ல் நடக்கிறது.-கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில் அக்.,14 காலை, 9:30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடக்கிறது. இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். 15ம் தேதி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டி நடக்கிறது.ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி, கல்லுாரி என மொத்தம், 3 மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் விண்ணப்பங்களை, கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, gmail.comஎன்ற இ-மெயில் அக்.,10க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்- 04324- 255077 ஐ தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !