உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஷா நகர் பகுதியில் வேகத்தடை தேவை

ஷா நகர் பகுதியில் வேகத்தடை தேவை

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், ஷாநகர் கார்னர் பகுதி உள்ளது. பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்டவை வேகத்தடை இல்லாததால், வேகமாக செல்கின்றன.இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவியர், வயதானவர்கள் இந்த சாலையை கடக்கும் போது, வாகன ஓட்டிகளால் அச்சமடைகின்றனர்.எனவே அனைவரின் நலன் கருதி, ஷா நகர் கார்னர் பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இப் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி