உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பெரிய குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். வருவாய்த் துறை சார்பாக, 8 பேருக்கு வகுப்பு சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றிதழ்களையும், கூட்டுறவு துறை சார்பாக, 4 பேருக்கு, 3.14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, மாநகராட்சி சார்பாக, 5 பேருக்கு சொத்துவரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகள் என மொத்தம், 17 பேருக்கு, 3.14 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில், மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ