மேலும் செய்திகள்
பணிச்சுமை உளைச்சலில் வருவாய்த் துறையினர்
14-Oct-2025
கரூர், கரூர் மாநகராட்சி சுக்காலியூரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, 70 பயனாளிகளுக்கு, 5.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஜூலை, 15 முதல் கரூர் மாவட்டத்தில் தொடங்கிய முகாம், 179 முகாம்களோடு நிறைவு பெறுகின்றன. ஊரக பகுதிகளில், 101 முகாம், நகர பகுதிகளில், 78 முகாம்கள் நடந்தன. பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு அருகாமையிலேயே, எளிதில் சென்று தங்களுடைய தேவைகளை, கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். 179 முகாமில், 69,887 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதம் இருக்கக்கூடிய மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, ஆய்வு செய்து விரைவில் அதற்கான உத்தரவுகளும் வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.முகாமில் மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் சரவணன், மண்டல தலைவர் கனகராஜ், தாசில்தார் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
14-Oct-2025