உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ரூ.16.78 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ரூ.16.78 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர், கரூர் மாநகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். இதை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.தொடர்ந்து, கூட்டுறவு துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு, 3.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், 5 பயனாளிகளுக்கு, 3.75 லட்சம் ரூபாய் பயிர் கடனுதவிகளும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ஊன்றுகோலும், ஒருவருக்கு, 10,800 ரூபாய் மதிப்பீட்டிலான சக்கர நாற்காலியும், ஒருவருக்கு காதொலி கருவியும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில், ஒருவருக்கு, காய்கறி விதை தொகுப்பும், ஒருவருக்குபழச்செடி தொகுப்பும், வேளாண்மைத் துறையின் சார்பில், விவசாயிக்கு விதைத் தளைகளும் என மொத்தம், 55 பேருக்கு, 16.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார்.டி.ஆர்.ஓ., கண்ணன், துணை மேயர் தாரணி சரவணன், சப் கலெக்டர் பிரகாசம், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ