உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தமிழ்ச்சோலை சமுதாய மன்றத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நங்கவரத்தில், புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து. புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டவுன் பஞ்., செயல் அலுவலர் காந்தரூபனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பொதுமக்களிடம் இருந்து, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.முகாமில் மாற்றுத் திறனாளிக்கான நலத்துறை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தொழிலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, திண்டுக்கல் மண்டல டவுன்., பஞ்.. உதவி இயக்குனர் ராஜா பார்வையிட்டனர். குளித்தலை தாசில்தார் இந்துமதி, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மோகன்ராஜ், தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் அன்பழகன், வார்டு கவுன்சிலர் செந்தில்வேலன், செல்வகண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.