க.பரமத்தி எல்லமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் :க.பரமத்தி அருகேயுள்ள எல்லமேட்டில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதில், அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ தலைமை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக, அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், மனுக்கள் பெறப்படுவதை நேரில் ஆய்வு செய்தார்.முகாமில், அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.