மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், கரூர் மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது.இதில் கரூர் மாநகராட்சியில், 15வது வார்டுக்கு காந்தி கிராமம் வடக்கு முல்லை நகர், விளையாட்டு மைதானத்திலும், புகழூர் நகராட்சியில் வார்டு, 16,17-க்கு, ஆர்.எஸ்.ரோடு காந்தியார் மண்டபத்திலும், தோகைமலை வட்டாரத்தில், கள்ளை மற்றும் தளிஞ்சி ஆகிய பஞ்.,களுக்கு கள்ளை சமுதாயக்கூடத்திலும், கடவூர் வட்டாரத்தில், கீரனுார் பஞ்.,க்கு கீரனுார் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்திலும், க.பரமத்தி வட்டாரத்தில், தென்னிலை கிழக்கு மற்றும் தென்னிலை மேற்கு ஆகிய பஞ்.,க்கு தென்னிலை லட்சுமி மஹாலிலும், குளித்தலை வட்டாரத்தில், வைகைநல்லுார் மற்றும் மணத்தட்டை ஆகிய பஞ்.,க்கு கீழக்குட்டப்பட்டி சமுதாய கூடத்திலும் முகாம் நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.