கரூர் வெங்கமேட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இதுவரை நடந்த முகாம்களின் மூலம், 6,439 ஆண்கள், 10,338 பெண்கள் என மொத்தம், 16,919 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு கூறினார்.மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், இணை இயக்குனர் செழியன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.