நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
குளித்தலை குளித்தலை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.கலெக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம் முகாமை துவக்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வு நலத்துறை சார்பில் நடந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், இருதயம், கண், காது, மூக்கு, தொண்டை உள்பட, 17 பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்கப்பட்டன. முகாமை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாமில் பயனடைந்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து அடையாள அட்டை, தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனர் செழியன், மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுப்பிரமணியன், தாசில்தார் இந்துமதி, தாட்கோ பொது மேலாளர் முருகவேலன், குளித்தலை வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், யூனியன், நகராட்சி கமிஷனர்கள், பஞ்., செயலர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.