பள்ளப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் வட மாநில தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மருத்-துவ பரிசோதனை செய்து கொண்டனர்.கரூர் மாவட்டத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் ஒரு வட்-டாரத்திற்கு, 3 முகாம் வீதம் மொத்தம், 24 முகாம்களும், மாநக-ராட்சியில், 3 என மொத்தம், 27 முகாம் பிப்ரவரி 2026 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு மருத்-துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கலெக் டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ முகாமை பார்வை-யிட்டார். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறு கால மருத்துவம், குழந்தைகள் நலம், இதய நலம், நரம்பியல், நுரையீரல், நீரழிவு, தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்-துவம், உணவியல் மருத்துவம் ஆகிய, 17 சிகிச்சைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டது.பள்ளப்பட்டி நகர மன்ற தலைவர் முனவர் ஜான், தி.மு.க., நகர பொறுப்பாளர் வசீம் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.