உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநில அளவிலான கபடி கரூர் அணிகள் சாதனை

மாநில அளவிலான கபடி கரூர் அணிகள் சாதனை

குளித்தலை: குளித்தலை அடுத்த, கீரனுார் பஞ்., ஓந்தாகவுண்டனுார் சிவா பிரதர்ஸ் கபடிக்குழு, கிராம பொதுமக்கள் சார்பாக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான தொடர் கபடி போட்டி நடந்தது.ஓந்தாகவுண்டனுாரில் உள்ள, சந்தன கருப்பண்ணசாமி விளை-யாட்டு திடலில், இரண்டு நாள் நடந்த கபடி போட்டிக்கு, கடவூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 52 அணிகள் கலந்து கொண்டன.கரூர் மாவட்டம், குண்டன் பூசாரியூர் கே.பி. பிரதர்ஸ் கபடி அணி வெற்றி பெற்று முதல் பரிசாக, 20 ஆயிரத்து 25 ரூபாய் மற்றும் 5 அடி சுழல் கோப்பையை தட்டிச்சென்றது. இரண்டா-வது பரிசாக கரூர் மாவட்டம், ஓந்தாகவுண்டனுார் சிவா பிரதர்ஸ் அணி, 15 ஆயிரத்து 25 ரூபாய், 4 அடி கொண்ட சுழல் கோப்-பையை பெற்றனர். மூன்றாவது பரிசாக கரூர் மாவட்டம், மேட்-டுத்திருக்காம்புலியூர் கே.எஸ். பிரதர்ஸ் கபடி அணி, 10 ஆயிரத்து 25 ரூபாய், 2 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையை பெற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை