உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முற்றுகை போராட்டம்

எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முற்றுகை போராட்டம்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில், எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நீண்ட நாட்களாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்தும், தெரு நாய்களிடமிருந்து மக்களை பாதுகாக்க வலியுறுத்தியும், அடிப்படை தேவையான சாலை, சாக்கடை வசதி செய்து தரக்கோரியும் நகராட்சி அலுவலகத்தை நுாற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பின்னர், அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ