மேலும் செய்திகள்
சோளம் பயிர் சாகுபடி தீவிரம்
27-May-2025
கரூர் கரூரில், தொடர்ந்து பலமான புழுதி காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் தவித்தனர்.ஆடி மாதம் துவங்குவதற்கு முன், நேற்று கரூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்று வீசியதால் சாலையில் உள்ள மணல் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்ததால், வாகனத்தை இயக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். சூறாவளி காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசியதால் மின்சாரம் தடைபட்டது.* கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, திருக்காம்புலியூர், மலைப்பட்டி, சேங்கல், பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, லாலாப்பேட்டை, வயலுார், சிவாயம், வரகூர், பாப்பகாப்பட்டி, பஞ்சப்பட்டி, அய்யர்மலை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் வாழை, சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் சாய்ந்துள்ளன.
27-May-2025