உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பலமாக வீசிய காற்று வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூரில் பலமாக வீசிய காற்று வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர், கரூரில், நேற்று பலமாக காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.மத்திய கிழக்கு அரபிக்கடலில், தெற்கு கொங்கன் கரைக்கு அப்பால், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக நீடிக்கிறது. தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது.இதன் காரணமாக, கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் குறைந்துள்ளது. மாறாக காற்று பலமாக வீசி, நேற்று சாரல் மழை பெய்தது. இதனால், நடந்து செல்பவர்களும், டூவீலரில் செல்பவர்களும் அவதிப்பட்டனர். காற்றில் மண் துகள்கள் பறந்து, டூவீலர்களில் செல்பவர்களின் கண்களை பதம் பார்த்தது. நடந்து செல்பவர்கள், முகத்தை மூடியபடி சென்றனர். பலத்த காற்று வீசியதால், சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை