உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி மாணவர் பலி

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி மாணவர் பலி

கிருஷ்ணராயபுரம், மேலசிந்தலவாடி நெடுஞ்சாலையில், இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.கரூர்-திருச்சி நெடுஞ்சாலை மேலசிந்தலவாடி அருகில், நேற்று மதியம் திருச்சி மாவட்டம், தா.பேட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் சிவபாலன், 20, கரூர் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். நேற்று காலை இவர் தேர்வு எழுதி விட்டு, மதியம் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.சோமூரை சேர்ந்த ராஜதுரை, 35, என்பவர் குளித்தலையில் இருந்து கரூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின. இதில் பலத்த காயமடைந்த சிவபாலன், குளித்தலை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழயில்உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜதுரையை, கோவை தனியார்மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை