கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் மாணவர்- திறன் விழா
கரூர், கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், முதலாமாண்டு பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு, 'ட்ரென்ட்ஸ்-25' என்ற தலைப்பில் மாணவர்- திறன் விழா நடந்தது. கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்களுக்கிடையே புதுமை தொழில்நுட்ப நுண்ணறிவு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை வளர்ப்பதே கல்லுாரியின் நோக்கம்,'' என்றார். திறன் விழாவில் வெப் வேவ், நெக்ஸ்ட் ஜென் ஸ்டார்ட், ஆப்பத்தான், கோட் ரிவைண்ட் மற்றும் கோட் குவிஸ் போன்ற தலைப்புகளில் திறன் சார்ந்த போட்டிகள் நடந்தன.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த மாணவர்கள், பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் போட்டிகளில் போட்டியிட்டு திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும், ஒவ்வொரு போட்டியிலும் முதல், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இணை செயலாளர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், முதலாமாண்டு துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சித்திரகலா உள்பட பலர் பங்கேற்றனர்.