ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி பல்வேறு கட்சியினர் மனு வழங்கல்
ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரிபல்வேறு கட்சியினர் மனு வழங்கல்குளித்தலை, செப். 28-குளித்தலை நகராட்சி கமிஷனர் நந்தகுமாரிடம், நேற்று வட்டார காங்., தலைவர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்) ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம், வி.சி.க., மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: குளித்தலை நகராட்சி தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து கட்சியினரும் (தி.மு.க., நீங்கலாக) சங்கு ஊதும் துாண் கட்டடம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி நகராட்சி சொத்துக்களை பாதுகாத்து போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாமல் அகற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.