உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வட்டாரத்தில் திடீர் சாரல் மழை

கரூர் வட்டாரத்தில் திடீர் சாரல் மழை

கரூர்: தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்-டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்ட மாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணி முதல், 6:00 மணி வரை கரூர் டவுன், திருகாம்-புலியூர், சுக்காலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தொழிற் பேட்டை, காந்தி கிராமம், தான்தோன்றி மலை, ஆண்டாங் கோவில், வெள்ளியணை, வாங்கல், புலியூர், மண்மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் திடீரென குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை முடிந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 24.80, அணைப்பாளையம், 14.20, க.பரமத்தி, 4.20, கிருஷ்ணராயபுரம், 1.50, மாயனுார், 1 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை