உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரவு நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் அவதி

இரவு நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் அவதி

கரூர்:க.பரமத்தியில், இரவு நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.க.பரமத்தி பஸ் நிறுத்தம், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் கரூர், கோவை, திருப்பூர் நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பகல் நேரங்களில் நின்று செல்கின்றன.இரவு, 10:00 மணிக்கு மேல் காலை, 6:00 மணி வரை செல்லும் அரசு பஸ்கள் க.பரமத்தியில் நிற்பதில்லை. இரவு நேரங்களில் வேறு பஸ்கள் இல்லாததால், பயணிகள் தவிக்கின்றனர். எனவே அரசு பஸ்களை, க.பரமத்தி நிறுத்தத்தில் நின்று செல்ல டிரைவர், கண்டக்டருக்கு, போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என, பயணிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை