உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சர்க்கரை வள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, கரட்டுப்பட்டி, சேங்கல், சின்னசேங்கல், வடுகப்பட்டி, அந்தரப்பட்டி, புனவாசிப்பட்டி, மத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள், 50 ஏக்கர் பரப்ப-ளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இதற்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.மேலும், தொடர் மழை பெய்து வந்ததால், கிழங்குகள் நன்கு வளர்ச்சியடைந்தன. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, கிழங்கு அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது. செலவு குறைவு, வருமானம் அதிகம் என்பதால், சர்க்கரை வள்ளிக்கி-ழங்கு சாகுபடியில் விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்-றனர். ஓரிரு நாட்களில் அறுவடை முழு தீவிரமடையும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி