கோடை உழவு பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, லட்சுமணம்பட்டி, வீரியபாளையம், வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, கோடங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில், கோடை உழவு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கோடை மழை மூலம் மானாவாரி நிலங்களில், உழவு செய்யும் போது மண் ஈரப்பதத்துடன் களைகள் அதிகம் இல்லாமல் இருக்கும். மேலும் மண் நல்ல முறையில் இருக்கும் போது மீண்டும் உழவு பணிகள் செய்து, விதை தெளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதன் மூலம் மானாவாரி நிலங்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும். நிலங்களில் ஈரத்தன்மை உள்ளதால், டிராக்டர் கொண்டு விவசாயிகள் உழவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.