உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இனாம் கரூர் நுாலகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி

இனாம் கரூர் நுாலகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி

கரூர், இனாம் கரூர் கிளை நுாலகத்தில், கோடை காலத்தையொட்டி, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.அதில், தமிழகத்தின் பாரம்பரிய பல விளையாட்டுக்கள் குறித்தும், அறிவியல் ரீதியான பயன்பாடுகள் குறித்தும், ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலர் தமிழ்செல்வன் விளக்கம் அளித்து பேசினார். அதை தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக முனைவர் பட்ட ஆய்வாளர் கார்த்திக், தமிழ் எழுத்துகளின் தொன்மை மற்றும் அதன் எழுத்து வடிவ வரலாறு குறித்து பேசினார்.தொடர்ந்து, தமிழ் எழுத்துகளை உச்சரிப்பது, நாப்பழக்கம் பயிற்சி, சொல்லாடல் விளையாட்டு பயிற்சி குறித்து கார்த்திகா, மணி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.பயிற்சி முகாமில், கிளை நுாலகர் மோகன சுந்தரம் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி