உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி பணி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி பணி

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சூரியகாந்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வயலுார், சிவாயம், கருப்பத்துார், சிந்தலவாடி ஆகிய பஞ்சாயத்துகளில், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சூரியகாந்தி செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. மேலும் செடிகளில் பூக்கள் பூத்துள்ளது. வரும் வாரங்களில் சூரியகாந்தி விதைகள் பிடிக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு மகசூல் கிடைக்கிறது. மேலும் குறைந்த செலவு மட்டுமே செய்யப்படுகிறது. சூரியகாந்தி சாகுபடி பணிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை