தோகைமலை யூனியன் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி ஆய்வு
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை யூனியன் பகுதிகளில் பல்-வேறு திட்ட நிதியின் கீழ் சாலை, கட்டடம், பண்ணை குட்டை, நீர்தேக்க நிலையம், தடுப்பு சுவர், கழிவுநீர் வடிகால் வசதி, குடி-யிருப்புகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்-றன. இதை, ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் நிர்வாக இயக்-குனர் கவிதா, மாவட்ட நிர்வாக பணியாளர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இதில், தோகைமலை--மைலம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து பரந்தாடி கோவில் வரை எம்.ஜி.எஸ்.எம்.டி., திட்டம் மூலம் நடந்து முடிந்த புதிய தார்ச்சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, பாலங்கள், சாலையின் தன்மை, சாலையின் நிளம், அகலம், கிராவல் மண் அளவு, ஜல்லிக்கற்களின் அளவு, தாரின் அளவு உள்ளிட்டவற்றை சோதனையிட்டார்.தொடர்ந்து, தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகா-தார நிலையத்தில், 15வது சி.எப்.சி., சுகாதார கட்டட நிதியின் கீழ் நடந்து வரும் பொது சுகாதார கட்டடத்தை ஆய்வு செய்தார். இதேபோல், தோகைமலை கோவில் குளத்தில், சமூக பொறுப்பு-ணர்வு நிதியின் கீழ் நடந்து வரும் சீரமைப்பு பணிகள், பாதிரிபட்-டியில் நடந்து வரும் புதிய குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், புத்துார் பஞ்., பகுதிகளில் உள்ள உப்புக்காச்சிப்பட்டி, மணியம்பட்டி, எல்லைப்பட்டி ஆகிய கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பணி-களை தரமாகவும், குறிப்பட்ட காலகெடுவிற்குள் முடிக்கவும் உத்-தரவிட்டார்.மாவட்ட உதவி இயக்குனர் சரவணன், உதவி செயற்பொறியாளர் குளித்தலை உபகோட்டம் சரவணன், தோகைமலை ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணி, ஒன்றிய பொறி-யாளர் பழனிச்சாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் விஜயராணி, ஆசைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.