திருக்குறள் பேரவை சார்பில் தமிழ் பரப்புரை நிகழ்ச்சி
கரூர்: கரூர் திருக்குறள் பேரவை சார்பில், ஜவஹர் பஜாரில் உள்ள, சங்க கால புலவர்கள் நினைவு துாண் முன், தமிழ் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.அதில், உலக அளவில் தமிழுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், திருக்குறள் பெருமைகள், தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்-பதன் அவசியம், சங்க கால தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைகள் படிக்க வேண்டும் என்பது குறித்து, தமிழ் அறிஞர் வா.மு. சேது ராமன் பேசினார்.திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், கவிஞர் செல்வம், எழுத்தாளர் மணிமாறன், திருமூர்த்தி, அழக-ரசன், வையாபுரி, கணபதி மற்றும் கரூர் அரசு கலை கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.