உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ., ஏஜென்டாக தமிழக கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி

பா.ஜ., ஏஜென்டாக தமிழக கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி

கரூர்: ''பா.ஜ.,வின் ஏஜென்டாக, தமிழக கவர்னர் ரவி செயல்படுகிறார்,'' என, கரூர் காங்., -எம்.பி.,ஜோதிமணி தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கரூர், ஜவகர் பஜார் கடை வீதியில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற, எம்.பி., ஜோதிமணி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியாக தேசிய கீதமும் பாடுவதே மரபாக உள்ளது. இந்த மரபை இதுவரை அனைத்து ஆட்சியாளர்களும், கவர்னர்களும் கடைப்பிடித்து உள்ளனர். இந்த மரபை மீறி கவர்னர் ரவி, தன் உரையை படிக்காமல் பாதியிலேயே சென்றுள்ளார்.இது சட்டசபை, தமிழக அரசு மட்டுமின்றி, தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். தமிழக மக்களின் உணர்வுகளை, கவர்னர் ரவி புண்படுத்துகிறார். அவர், பா.ஜ., ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார். தமிழக கவர்னரின் வசதிக்கு தகுந்தாற்போல் அனைத்தையும் மாற்ற முடியாது. பா.ஜ.,வின் அரசியல் ரீதியான தாக்குதலுக்கு, கவர்னர் மாளிகை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை