உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரும் 20ல் ஓரணியில் தமிழக பொதுக்கூட்டம்

வரும் 20ல் ஓரணியில் தமிழக பொதுக்கூட்டம்

கரூர்:''வரும், 20ல் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் நடக்கிறது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார்.கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:ஓரணியில் தமிழ்நாடு மூலம் ஒரு கோடி பேர், தி.மு.க.,வின் உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, இன்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, ஓட்டுச்சாவடி அளவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில், 'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் இணைந்த உறுப்பினர்கள், மண், மொழி காக்க உறுதிமொழி ஏற்க உள்ளனர். தொடர்ந்து, நாளை, கரூரில் தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. வரும், 20ல் கரூர் செங்குந்தபுரம், 80 அடி சாலையில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.முதல்வர் ஸ்டாலின் முப்பெரும் விழா என்ற கடிதம் குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ''ஒவ்வொரு முப்பெரும் விழாவின் போதும் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்கமான நடைமுறை தான்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை