மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு
27-Apr-2025
பணி நிறைவு பாராட்டு
22-Apr-2025
குளித்தலை: குளித்தலை நகராட்சி, மாரியம்மன் கோவில் நடுநிலை பள்ளியில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்டம், குளித்தலை வட்டார கிளை சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. குளித்தலை வட்டார தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.விழாவில், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், வை.புதுார் மற்றும் நங்கவரம், பட்டதாரி ஆசிரியர்கள் சுதா, நங்கவரம் வேல்விழி, வதியம் தலைமை ஆசிரியர் யோகாம்பாள் ஆகியோரை மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான பெரியசாமி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட தலைவர் ரகுபதி, மாவட்ட பொருளாளர் ரஞ்சித்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், பாபு, சுரேஷ் மாவட்ட துணை தலைவர்கள் குமார், முருகேசன் மாவட்ட துணை செயலாளர் பூபதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினர். இதில், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், கரூர், பரமத்தி, அரவாக்குறிச்சி, தான்தோன்றிமலை ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.
27-Apr-2025
22-Apr-2025