டேங்க் ஆபரேட்டர் பாம்பு கடித்து சாவு
குளித்தலை: குளித்தலை அடுத்த கீரனுார் பஞ்., குன்னுடைய கவுண்டம்பட்-டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 47. இவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின், தற்காலிக ஆபரேட்டராக பணியில் இருந்தார். கடந்த, 8 காலை, 7:10 மணிக்கு, குன்னுடையான் கவுண்டம்பட்-டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே நின்று-கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் ராமமூர்த்தி அலறி உள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கி-ருந்து திருச்சி அரசு மருத்துவ கல்லுாரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.