மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
23-Aug-2025
கரூர், கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில், டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அவசர கதியில் காலி பாட்டில், திரும்ப பெறும் திட்டத்தை அமலாக்க நினைக்கும், டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் சுப்பிரமணி, மா.கம்யூ., நகர செயலர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
23-Aug-2025