ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசி-ரியர்கள் சங்கம், மாவட் ட தலைவர் மலைகொழுந்தன் தலை-மையில், சி.இ.ஓ., அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்-பாட்டம் நடந்தது.அதில், வேலுாரில் அரசு பள்ளி மாணவர்கள் ரீல் செய்தமைக்கு, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும், தவறு செய்யும் மாணவர்களை, கண்டிப்பதற்கு நெறிமுறைகளை வகுத்து, அரசாணை வெளியிட வேண்டும், கற்பித்தல் பணி சாராத பிற பணிகளுக்கு, தனி அலுலரை நியமிக்க வேண்டும், ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மகேந்திரன் உள்-பட, 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.