உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில் உண்டியலில் திருட்டு: சென்ட்ரிங் தொழிலாளி கைது

கோவில் உண்டியலில் திருட்டு: சென்ட்ரிங் தொழிலாளி கைது

குளித்தலை:குளித்தலை அடுத்த தரகம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலையில், தனியார் பராமரித்து வந்த முனியப்பன், முனியம்மா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள உண்டியலை, கடந்த, 2 இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரை, 'சிசிடிவி' மூலம் தேடினர். இதில், உண்டியலில் பணம் திருடிய, சென்ட்ரிங் தொழிலாளியான தரகம்பட்டி பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், 20, என்பவரை கைது செய்து குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை