| ADDED : மார் 04, 2026 06:41 AM
கரூர்:சந்திர கிரகணத்தை முன் னிட்டு, கோவில்களில் நடை மூடப்பட்ட நிலையில், இரவு, 7.30 மணிக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் நேற்று மதியம், 3:20 மணிக்கு தொடங்கி மாலை, 6:48 மணிக்கு முடிவடைந்தது. பொதுவாக சூரியகிரகணம், சந்திர கிரகணம் நாட்களில் கோவில்களில் நடை மூடப்படுவது வழக்கம். இதன்படி கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில், மாசிமக தேரோட்டம் நேற்று காலை, 7:00 நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு நடை மூடப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு கிரகண சாந்தி பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்த பின், மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டது.* கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்ர் கோவிலில், காலை 6:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடை திறக்கப்பட்டது. அதன் பின் நடை மூடப்பட்டு இரவு, 7:15 மணிக்கு திறக்கப்பட்டு, சாயரக்சை பூஜை நடந்தது.* கிருஷ்ணராயபுரத்தில், குருநாதன் பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு, நேற்று குருநாதன் சுவாமி, பிடாரி அழகு நாச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பின் னர் கோவில் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்து கோவில் சுத்தம் செய்து, இன்று காலை வழிபாடு பூஜை செய்யப்படுகிறது.