உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழகத்தில் தாமதமாக தொடங்கிய தாயுமானவர் திட்டம்: பிரேமலதா

தமிழகத்தில் தாமதமாக தொடங்கிய தாயுமானவர் திட்டம்: பிரேமலதா

ராசிபுரம், ''தமிழகத்தில், தாயுமானவர் திட்டம் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது,'' என, பிரேமலதா பேசினார்.தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பிரேமலதா பிரசாரத்தை மேற்கொண்டார். தம்மம்பட்டியில் இருந்து நாமக்கல் வந்த பிரேமலதாவிற்கு, மெட்டாலா பகுதியில் ராசிபுரம் நகர செயலர் இளையராஜா தலைமையில், நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின், அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:நானும், விஜயகாந்த் இருவரும் சுற்றுப்பயணம் சென்றபோது, பொதுமக்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, ரேஷன் கடைகளில் வரிசையாக நின்று பொருட்களை வாங்கி சென்றனர். இதற்கு ஏதாவது தீர்வு காணவேண்டும் என, யோசித்த விஜயகாந்த் வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுக்க வேண்டும் என கூறினார். டில்லி மற்றும் வட மாநிலங்களில் வீடுகள்தோறும் ரேஷன் பொருட்கள் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில், தாமதமாகத்தான் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.இவ்வாறு பேசினார்.இந்நிகழ்ச்சியில் ஏரா ளமானோர் கலந்து கொண் டனர். தொடர்ந்து ஆண்ட கலுார் கேட்டில், பிரேமலதா விற்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ