உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு அவசியம்

ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு அவசியம்

ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள்மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு அவசியம்கரூர், அக். 17-அமராவதி ஆற்றில் ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து விளையாடுகின்றனர். இதைதடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.மழை காரணமாக, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. ஆனால், கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அமராவதி ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. இந்நிலையில், எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்பதால், ஆற்றில் இறங்கி சிறுவர்கள் விளையாடுகின்றனர். மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக அமராவதி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்ற வண்ணம் உள்ளது. இந்த ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல், சிறுவர்கள் ஆற்றில் குதித்து விளையாடி வருகின்றனர். குறிப்பாக கரூர் அமராவதி பசுபதிபாளையம் பாலம் கீழ் தண்ணீர் ஓடுகிறது. அங்குள்ள பாறையிலிருந்து சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர். தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஆபத்தை உணராமல் நீச்சல் அடித்து செல்கின்றனர். சிலர், துணிகளை துவைப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை காரணமாக, எப்போது வேண்டுமானலும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும். இந்த பகுதியில் நீச்சல் அடித்து குளிக்கும் போது பாறைக்கு இடையில் சிக்கி நீரில் மூழ்கி, தண்ணீர் அடித்து செல்வதால் இறப்புகள் நடக்கிறது. முன் எச்சரிக்கையாக வெள்ள தடுப்பு நடவடிக்கைளில் மாவட்ட நிர்வாகம் அதிகவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற ஆபத்தான பகுதிகளில் ஏதாவது விபரீத சம்பவங்கள் நடப்பதற்கு முன் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர், கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ