உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும் 8ல் தெய்வ திருமண விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும் 8ல் தெய்வ திருமண விழா

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தெய்வ திருமண விழா வரும், 8ல் நடக்கிறது. கரூர் மகா அபி ேஷக குழு சார்பில், 27 வது தெய்வ திருமண விழா, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நாளை காலை கொடி மரம் மற்றும் விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து நாட்டியாஞ்சலி, தேவார இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, மாலை முளைப்பாரி மற்றும் சீர் தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வரும், 8 காலை, 6:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபி ேஷகம், 8:00 மணிக்கு மங்கள இசை, 10:30 மணிக்கு தெய்வ திருமண விழா நடக்கிறது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !