உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பகவதி அம்மன் கோவிலில்குண்டம் இறங்கும் திருவிழா

பகவதி அம்மன் கோவிலில்குண்டம் இறங்கும் திருவிழா

கரூர்:புகழூர் அருகே, பகவதி அம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கரூர் மாவட்டம், புகழூர் பாண்டிப்பாளையம் பகவதி அம்மன் கோவிலில், பூக்குழி திருவிழா கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தீர்த்தக்குடம் ஊர்வலம், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில், அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிறகு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. நேற்று உற்சவர் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ