வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.,
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளான மாயனுார், மணவாசி, மகாதானபுரம், பழையஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள மக்களை, கரூர் எம்.பி., ஜோதிமணி, நேற்று நேரில் வந்து தேர்தலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, அவர் கூறுகையில், ''பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர், துணை முதல்வர் குடும்ப அரசியல் செய்து வருவதாக கூறி வருகிறார். ஆனால், தி.மு.க.,வில், 20, 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த-வர்கள் உள்ளனர். எனவே, பா.ஜ., மாநில தலைவர், தி.மு.க., குறித்து பேச எந்த விதமான தகுதியும் இல்லை,'' என்றார்.