உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்

ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்

அரவக்குறிச்சி, மலைக்கோவிலுார், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அரவக்குறிச்சி அருகே, நாகம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கோவிலுாரில், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. நாள்தோறும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக, மலைக்கோவிலுார் சுகாதார நிலையத்துக்கு வருகின்றனர்.மேலும், கரூர்--மதுரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்தில், சிறுசிறு காயங்கள் ஏற்படுபவர்கள், மலைக்கோவிலுார் சுகாதார நிலையத்தில், முதலுதவி சிகிச்சைக்காக வருகின்றனர்.ஆனால், சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை, குடியிருப்பு பகுதிகளை தாண்டி, குறுகிய சாலையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால், மதுரை தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை பகுதியில் இருந்து, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் வரை, தரமான முறையில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி