மேலும் செய்திகள்
வருடாபிஷேக விழா
30-Aug-2025
நொய்யல் அருகே, அத்திப்பாளையம் சின்ன பொன்னாச்சி அம்மன் கோவில், கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் நடந்தது.திருப்பணி தொடங்க கோவில் வளாகத்தில் ஹோமம் செய்யப்பட்டது. சின்ன பொன்னாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சின்ன பொன்னாச்சிச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.
30-Aug-2025