உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன் கூட்டியே சீசன் தொடக்கம் முருங்கைகாய் விலை குறைந்தது

முன் கூட்டியே சீசன் தொடக்கம் முருங்கைகாய் விலை குறைந்தது

கரூர்: சீசன் தொடங்கிய நிலையில், முருங்கைகாய் விலை குறைந்துள்-ளது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்தாண்டு, தென் மேற்கு பருவமழை துவங்கும் முன், கரூர் மாவட்டத்தில், எதிர்-பார்த்த அளவில் மழை பெய்ததால், மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர். வழக்கமாக ஆண்டுதோறும், ஜூன் முதல் அக்டோபர் வரை, முருங்கை காய்க்கு சீசன் காலமாகும். ஆனால், முன்னதாகவே கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு முருங்கைகாய் வரத்து, கடந்த ஒரு வார காலமாக அதிகரித்துள்ளது. இதனால், முருங்-கைகாய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கரூர் மாவட்டம், க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி வட்டா-ரத்தில், முருங்கைகாய் சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவ-மழை காரணமாக, சீசன் முன் கூட்டியே தொடங்கிய நிலையில், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு முருங்-கைகாய் வரத்து தொடங்கியுள்ளது.கடந்தாண்டு டிச., மாதம், சீசன் முடிந்த நிலையில், ஒரு கிலோ முருங்கைகாய், 180 முதல், 200 ரூபாய் வரை விற்றது. தற்போது, 80 முதல், 100 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. முருங்-கைகாய் விலை குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி-யுடன், அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை