உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சரியான நேரத்திற்கு வராத டவுன் பஸ் மாணவர்கள் மறியல் போராட்டம்

சரியான நேரத்திற்கு வராத டவுன் பஸ் மாணவர்கள் மறியல் போராட்டம்

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்திற்கு டவுன் பஸ் தாமதமாக வருவதால், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், நேற்று காலை டவுன் பஸ்சை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி கிராமத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய டவுன் பஸ் வழித்தடம் திறக்கப்-பட்டது. கரூர் முதல் லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, புனவாசிப்-பட்டி வழியாக டவுன் பஸ் சென்றது. மகிளிப்பட்டி வழியாக காலை, 8:40 மணிக்கு டவுன் பஸ் வருகிறது. இந்த பஸ்ஸில் இங்-குள்ள மாணவர்கள் ஏறி, லாலாப்பேட்டை அரசு பள்ளிக்கு படிக்க செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக சரியான நேரத்திற்கு பஸ் வருவதில்லை. இதனால் குறித்த நேரத்திற்கு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மகிளிப்பட்டி கிரா-மத்துக்கு நேற்று காலை, 9:20 மணிக்கு டவுன் பஸ் வந்தது. மாணவ, மாணவிகள் பஸ்சை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்கள், பெற்றோர்களுடன் பேச்சுவர்த்தை நடத்தினர். அப்போது, சரியான நேரத்திற்கு டவுன் பஸ் இயக்குவதற்கான உறுதி தரப்பட்டது. அதன்படி மாணவர்கள் கலைந்து சென்று, பஸ்ஸில் ஏறி பள்ளிக்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பர-பரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை