உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரியில் ரூ.406.50 கோடியில் கதவணை கரூரில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள பணி

காவிரியில் ரூ.406.50 கோடியில் கதவணை கரூரில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள பணி

கரூர்: கரூர் அருகே, புகழூர் காவிரியாற்றின் குறுக்கே, 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கரூர் மாவட்டம், புகழூரில் காவிரி யாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, புகழூரில் காவிரியாற்றில் தடுப்பணை கட்ட கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, 406.50 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் நஞ்சை புகழூர், நாமக்கல் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது. இதையடுத்து கடந்த, 2020 நவம்பரில் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.இந்நிலையில், 2021ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புகழூரில் கதவணை கட்டும் பணி நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே எழுந்தது. ஆனால், கதவணை கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பணையில், 70க்கும் மேற்பட்ட துாண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாலத்தில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.மேலும் கடந்த, 23ல் தமிழக சட்டசபை அரசு உறுதி மொழி குழுவினர், பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையில், புகழூரில் தடுப்பணை கட்டும் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கதவணை பணியை விரைவாக முடிக்கும்படி, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். கதவணை கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கதவணையின்சிறப்பு அம்சம்புதிய கதவணை, 1,056 மீட்டர் நீளத்தில், 73 ஷட்டர்களுடன் அமைக்கப்பட உள்ளது. அதில், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். புதிய கதவணையில் இருந்து வினாடிக்கு, மூன்று லட்சத்து, 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும். கதவணையின் வலதுபுற வாங்கல் வாய்க்கால் மூலம், 1,458 ஏக்கர் பாசன நிலங்களும், இடதுபுற மோகனுார் வாய்க்கால் மூலம், 2,583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெற உள்ளது. புதிய கதவணை மூலம் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை