பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் திருட்டு
கரூர்: கரூரில், தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில், டயர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.கரூர் - கோவை சாலை ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 48, தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 8ல் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த, எட்டு டயர்கள், இரண்டு பேட்டரி, இரண்டு வெல்டிங் செட் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 98 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, சுப்பிரமணி டவுன் போலீசில் புகார் செய்தார்.